மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு கொரோனாவால் மரணம்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (09:41 IST)
மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு கொரோனாவால் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று காலமானார். 

 
60வது வயதாகும் மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு உடல் நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா  இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
மறைந்த முன்னாள் எம்.பி ராம்பாபு 1989, 1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பிலும், 1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று 3 முறை மதுரை எம்.பி.யாக இருந்தவர். 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு தேர்தல் போட்டியிடவில்லை. 
 
ஆனால், எம்.பி.யாக இருந்த காலத்தில் ஏ.ஜி.எஸ்.ராம்பாபு மதுரைக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்