ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆவது எப்போது? – சகோதரர் சத்யநாராயணா தகவல்!

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (08:41 IST)
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து அவரது சகோதரர் தகவல் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்தபோது ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இன்று மாலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஞ் ஆக உள்ளதாகவும், எந்த பிரச்சினையுமின்றி தேர்தல் பணிகளில் ஈடுபடுவார் என்றும் அவரது சகோதரர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்