ஆன்மீக பயணம் நிறைவு.. சென்னை திரும்பிய ரஜினிகாந்த் 4 தலைவர்களுக்கு வாழ்த்து..!

Mahendran

புதன், 5 ஜூன் 2024 (18:09 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற நான்கு முக்கிய தலைவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் ரஜினிகாந்த் இமயமலை சென்றார் என்றும் கேதார்நாத், பத்ரிநாத், பாபா குகை உள்ளிட்ட இடங்களுக்கு அவர் ஆன்மீக பயணம் மேற்கொண்டார் என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் இமயமலையில் இருந்து நேராக ரஜினிகாந்த் டெல்லி செல்வார் என்று செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் நகர் சென்னை திரும்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தேர்தல் முடிவு குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. 
 
அப்போது தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், ஆந்திர முதல்வராக பதவி ஏற்க இருக்கும் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகிய நால்வருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 
 
மேலும் தனது ஆன்மீக பயணம் நன்றாக இருந்தது என்றும் ஒவ்வொரு முறை இமயமலை செல்லும்போதும் புதுவிதமான அனுபவம் ஏற்பட்டது என்றும் இந்த முறையும் தனக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டதாகவும் ரஜினிகாந்த தெரிவித்தார். 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்