2024 தேர்தலில் 116% அதிக வாக்குகளை பெற்றுள்ளோம்: அண்ணாமலை

Siva

செவ்வாய், 4 ஜூன் 2024 (20:01 IST)
2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட 2024 ஆம் ஆண்டு 116 சதவீதம் அதிக வாக்குகளை பெற்றுள்ளோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில் சற்று முன் தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்பது அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு சதவீதம் இரட்டை இலக்கத்தில் உயர்ந்துள்ளது அந்த கட்சியின் தொண்டர்களுக்கு ஆறுதலாக இருக்கும் நிலையில் சற்றுமுன் அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் 3.7 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்றோம் என்றும் ஆனால் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 10.7 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளோம் என்றும் இது 116 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்