பணம்,புகழ், உச்சம் பார்த்தும் நிம்மதி இல்லை… ரஜினி பொதுவெளியில் புலம்பல்!

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (08:26 IST)
வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி நிரந்தரம் கிடையாது என ரஜினிகாந்த் பேட்டி.

 
யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பின் பேசினார். அவர் அங்கு பேசியதாவது,

பணம்,புகழ்,பெரிய பெரிய அரசியல்வாதிகளை பார்த்தவன் நான்.  ஆனால் அதில் சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை. வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி நிரந்தரம் கிடையாது. நான் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த படங்கள் ராகவேந்திரா மற்றும் பாபா.

இந்த இரு படங்கள் வெளியான பிறகு தான் மக்கள் பலருக்கும் ராகவேந்திரா மற்றும் பாபா பற்றி தெரிய வந்தது. பாபா படத்திற்கு பிறகு நிறைய பேர் இமய மலைக்கு சென்றதாக சொன்னார்கள். என்னுடைய ரசிகர்கள் இந்த இயக்கத்தில் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் நான் நடிகராக இங்கே இருக்கிறேன்.

இந்த உலகத்தை விட்டு செல்லும் போது சொத்தை சேர்த்து வைத்து செல்வதை விட நோயாளியாக இல்லாமல் செல்வது முக்கியம். இதனால் உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு ரொம்ப முக்கியம் என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்