எல்லாவற்றிற்கும் பதவி விலகல் தீர்வாகாது: ஸ்டாலினை சீண்டிய ரஜினிகாந்த்!

Webdunia
புதன், 30 மே 2018 (13:20 IST)
தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பிற்கு பின்னர் முதன் முறையாக மக்கள் பிரச்சனைக்காக களமிறங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த். 
 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று இவர்களை காண நடிகனாக வந்துள்ளதாக கூறி ரஜினிகாந்த் அங்கு சென்றுள்ளார். 
 
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியது பின்வருமாறு...
 
தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிமாகி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் சமூக விரோதிகள் கலவரத்தை ஏற்படுத்தினர். தற்போது இந்த தூத்துக்குடி போராட்டத்திலும் இவ்வாறே நடந்துள்ளது. 
 
சில போராட்டங்கள் தூண்டப்படுகின்றன, ஆனால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து பிரச்சனைகளுக்கும் பதவி விலகல் தீர்வாகாது. தூப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தனி நபர் விசாரணை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. 
 
ஜெயலலிதாவின் ஆட்சியின் போது சமூக விரோத செயல்களை அவர் எவ்வாரு இரும்புகரம் கொண்டு ஒடுக்கினாரோ அவரது பெயரில் நடக்கும் ஆட்சியும் அவ்வாறே செயல்பட வேண்டும். 
 
துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்