போராடித்ததால் வெளியே வந்துவிட்டேன்: சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய தினகரன் பேட்டி

புதன், 30 மே 2018 (12:17 IST)
தமிழக சட்டமன்றத்தில் இன்று மானியக்கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் எம்.எல்.வுமான டிடிவி தினகரன் சற்றுமுன்னர் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
 
பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது மானியக்கோரிக்கைகள் குறித்து பேசுபவர்கள் முதல்வரையும் துணை முதல்வரையும் வாழ்த்தி பேசுவதிலேயே குறியாக உள்ளனர். எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு தரவில்லை என்பதாலும் இந்த வாழ்த்துக்களை கேட்டு கேட்டு போரடித்ததாலும் நான் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிவிட்டேன் என்று கூறினார்
 
மேலும் ரஜினிகாந்த் தூத்துகுடி மக்களை ஒரு நடிகராக சென்று பார்த்து வருவதாகவும் அவர் இன்னும் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றும் கூறினார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும், இப்போது போடப்பட்டுள்ள அரசாணை வலுவானதல்ல என்றும் கூறிய தினகரன், திமுக மாதிரி சட்டமன்றம் கூட்டுவது வேடிக்கையான ஒன்று என்றும், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் சட்டபேரவைக்குள் வரவேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்