ஜெயலலிதா வீட்டிற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. பிறந்த நாளில் செய்த மரியாதை..!

Mahendran
திங்கள், 24 பிப்ரவரி 2025 (11:29 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது இல்லத்திற்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  மரியாதை செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சற்றுமுன் நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்தார். அவருக்கு சால்வை அணிவித்து ஜெ தீபா வரவேற்பளித்தார். இதனை தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார்.
 
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் "ஜெயலலிதா இல்லாவிட்டாலும், அவரது நினைவு மக்கள் மனதில் நிலைத்திருக்கும். இதற்கு முன்பு மூன்று முறை வேதா இல்லத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்துள்ளேன்," என தெரிவித்தார்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, அவரது இல்லத்திற்கே சென்று நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்