2021 மார்க் தி டேட் ... : தலைவர் ஆன் பொலிடிகல் ஃபயர்!!

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (16:12 IST)
2021ம் ஆண்டு அரசியலில் தமிழ் மக்கள் மிகப் பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நூற்றுக்கு நூறு சதவீதம்  நிகழ்த்துவார்கள் என ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். 
 
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்து வரும் சூழலில், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான மோதல் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதிய கட்சி தொடங்கியவர்களும், தொடங்க இருப்பவர்களும் கூட அரசியல் வெற்றிடம் இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.
 
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கமல் உடனான கூட்டணி குறித்தும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார், 
நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழ் மக்கள்தான் காரணம். அவர்களுக்கு இந்த விருதை நான் சமர்ப்பிக்கிறேன். கமலுடனான் கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் தான் முடிவெடுக்க வேண்டும். அப்படி கூட்டணி அமைந்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்பது அப்போதைய சூழ்நிலையை பொருத்து கட்சி நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள். எனவே அதைப்பற்றி நான் இப்போது கூற முடியாது. 
 
2021 ஆம் ஆண்டு மிகப்பெரிய அதிசயத்தை, அற்புதத்தை தமிழக மக்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் அரசியலில் நிகழ்த்துவார்கள் என தன்னுடைய டிரேட் மார்க் சிரிப்போடு கூறிவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டார் ரஜினிகாந்த். 
 
ரஜினிகாந்த் கூறியதை வைத்து பார்க்கும் போது கமல் - ரஜினியின் கூட்டணி அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு உறுதியாகிவிடும் அதற்குள் ரஜினி கட்சி துவங்கிவிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்