காடு வா வா, வீடு போ போங்கர காலத்துல கூட்டணி: பங்கமாய் கலாய்த்த அமைச்சர்!

வியாழன், 21 நவம்பர் 2019 (12:54 IST)
ரஜினி - கமல் இணைப்பு குறித்து தமிழகம் ஹாட்டாக பேசி வரும் நிலையில் இதனை பற்றி பங்கமாய் கலாய்த்து உள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ. 
 
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்து வரும் சூழலில், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான மோதல் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் அதிமுகவுக்கு தனித்து நிற்க பலமில்லை என்று பேசி வருகின்றனர். 
 
புதிய கட்சி தொடங்கியவர்களும், தொடங்க இருப்பவர்களும் கூட அரசியல் வெற்றிடம் இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.  இவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதே அதிமுக அமைச்சர்கள் அதிகப்பட்ச வேலையாக மாறியிருக்கிறது. 
இந்நிலையில் கமல் - ரஜினி இருவரும் ஒன்றாக இணைந்து அரசியலில் பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளதை பிடித்துக்கொண்ட அதிமுகவினர் இது குறித்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூவும் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 
 
படத்தில் வேண்டுமென்றால் கமலும், ரஜினியும் கதாநாயகனாக தெரியலாம். ஆனால் நிஜத்தில் அது சாத்தியமில்லை. கட்சியே ஆரபிக்காத ரஜினி பொங்களுக்கு வெளியாகவுள்ள தனது திரைப்படத்திற்காக ஒப்படி வாய்ஸ் கொடுத்து வருகிறார். 
 
வயதான காலத்தில் கமல், ரஜினி அரசியலுக்காக ஒன்றிணைவது காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது என்பதற்கு சமம் என நக்கலடித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்