காவேரி மருத்துவமனைக்கு ரஜினிகாந்த் வருகை!

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (20:57 IST)
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு கடந்த 4 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது  உடல் நிலை சீரான நிலையில் இருந்து வருகிறது. 
காவேரி மருத்துவமனை தற்போது கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. அவரின் நாடித்துடிப்பு நன்றாக இருக்கிறது. வயது முதிர்வு காரணமாக இன்னும் சில நாட்களுக்கு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது என அறிக்கை வெளியிட்டது. 
 
இந்நிலையில், படப்பிடிப்பிற்காக டேராடூனில் இருந்த ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பியதும் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியை காண வந்துள்ளார். அங்கு ஸ்டாலினை சந்தித்து முதலில் கருணாநிதியின் உடல் நிலை குறித்து தெரிந்துக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்