விஜயகாந்தை சந்திக்கும் ரஜினிகாந்த்!!! தூதுவிடுகிறதா பாஜக?

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (10:29 IST)
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத வகையில், ரஜினிகாந்த் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க இருக்கிறார்.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துவிட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தேமுதிகவுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
 
ஆனால் தேமுதிக தரப்பில் பத்து தொகுதிகளில் பிடிவாதமாக இருந்ததாகவும் குறைந்தபட்சம் பாமகவுக்கு கொடுத்த ஏழு தொகுதிகளாவது வேண்டும் என்று வலியுறுத்தியதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
 
இந்நிலையில் நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசினார். அரசியல் சம்மந்தமாக தான் பேசினோம் என திருநாவுக்கரசர் கூறினார். இதனால் விஜயகாந்த் திமுக பக்கம் சாய் வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது விஜயகாந்தை அவரது வீட்டில் வைத்து சந்திக்க உள்ளார். ரஜினிகாந்த் தாம் மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என கூறியிருந்தாலும் கூட, யார் சொன்னாலும் அடிபணியாமல் முரண்டுபிடிக்கும் விஜயகாந்தை வழிக்கு கொண்டுவர ரஜினி மூலம் பாஜக தூது  விடுகிறது எனவும் கூறப்படுகிறது. எது எப்படியிருந்தாலும், இவர்களின் சந்திப்பு எதற்காக என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்