நீட் போல் டாஸ்மாக் கடைகளை மூட உதயநிதி கையெழுத்து வாங்குவாரா? ராஜேஸ்வரி கேள்வி..!

சனி, 28 அக்டோபர் 2023 (15:35 IST)
நீட் தேர்வு ரத்து செய்ய ஒரு கோடி நபர்களிடம் கையெழுத்து வாங்குவது போல் ஒரு கோடி பெண்களிடம் கையெழுத்து வாங்கி டாஸ்மார்க் கடைகளை மூடுவதற்கு உதயநிதி நடவடிக்கை எடுப்பாரா என ராஜேஸ்வரி ப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பதை வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி கையெழுத்தை பெற்று வருகிறார்.  முதல் கையெழுத்தாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில்  அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா உதயநிதி ஸ்டாலினிடம் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். 100 நாட்களில் ஒரு கோடி பெண்களிடம் கையெழுத்து வாங்கி டாஸ்மார்க் கடைகளை மூட வலியுறுத்தினால் அவரது அப்பாவிடம் சொல்லி உதயநிதி கடைகளை மூட வைப்பாரா என கேள்வி எழுப்பு உள்ளார். 
 
நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பை விட டாஸ்மாக் மது குடிப்பதால் தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்றும், இதையும் உதயநிதி ஸ்டாலின் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.  ராஜேஸ்வரி பிரியாவின் கோரிக்கையை உதயநிதி ஸ்டாலின் ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்