அக்டோபர் 30ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: கலெக்டர் அதிரடி..!

வெள்ளி, 27 அக்டோபர் 2023 (18:52 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி டாஸ்மாக் அரசு மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் காவல்துறையின் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்

இந்த நிலையில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மது கடைகளும் மூட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  லட்சுமிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எனவே அக்டோபர் 30ஆம் தேதி தேவர் குருபூஜை தினத்தன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எந்த டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்