ட்விட்டரில் வைரலாகும் #SorryDMK ஹேஷ்டேக்.. பாகிஸ்தான் தோல்விக்கு உதயநிதி காரணமா?

சனி, 28 அக்டோபர் 2023 (12:08 IST)
ட்விட்டர் சமூக வலைதளத்தில் திடீரென #SorryDMK என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருக்கும் நிலையில் இது குறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக ஒரு சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் போட்டனர். இதனை அடுத்து திடீரென பாகிஸ்தான் மீது பாசம் பொங்கி திமுகவினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சாரி பாகிஸ்தான் என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கினார்.  

பாகிஸ்தானுக்கு என்றைக்கு திமுக ஆதரவு கொடுக்க தொடங்கியதோ அன்றையிலிருந்து பாகிஸ்தான் அணி இதுவரை ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை. அடுத்து விளையாடிய 3 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது.

இதை சுட்டிக்காட்டி உள்ள நெட்டிசன்கள்  திமுக ஆதரவு தந்ததிலிருந்து பாகிஸ்தான் முட்டைதான் எடுத்து வருகிறது என்று உதயநிதியின் முட்டை புகைப்படத்தை பதிவு செய்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் முட்டை மார்க் எடுத்தால் நீட் பிஜியில் பாஸ் ஆகிவிடலாம் என்று  கூறிய புகைப்படத்தை பாகிஸ்தான் அணிக்கு பொருத்தமாக்கி நெட்டிசன்கள் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்