இன்று காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை

Siva
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (07:55 IST)
இன்று காலை பத்து மணி வரை தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வு தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் நிலவி வருவதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்,   டிசம்பர் 31ஆம் தேதி வரை மிதமான மழையும், ஜனவரி 1 மற்றும் 2 தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டது.

இன்று காலை 10 மணி வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், புதுச்சேரியிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்