இன்று 10 மாவட்டங்களை வெளுக்கப் போகும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

Prasanth K

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (14:31 IST)

தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வரும் நிலையில் இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதலாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் இன்று பல இடங்களில் வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது.

 

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்