ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் சந்திப்புக்கு அண்ணாமலை காரணமா? அவரே அளித்த விளக்கம்..!

Mahendran

வெள்ளி, 31 அக்டோபர் 2025 (17:07 IST)
பசும்பொன்னில் நடந்த தேவர் குருபூஜை நிகழ்வில், ஓ. பன்னீர்செல்வம் , டிடிவி தினகரன், மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக இணைந்து மரியாதை செலுத்தினர். இந்த சந்திப்பு குறித்து பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, இதற்கு தான் காரணம் அல்ல என்று மறுத்துள்ளார்.
 
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மூவரும் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமா? நான் வாய் திறந்தால் எல்லாவற்றையும் பேசிவிடுவேன்; ஆனால், அமித்ஷாவுக்கு கொடுத்த வாக்குறுதியால் லட்சுமண ரேகையை தாண்டவில்லை" என்று கூறினார்.
 
திமுக அரசு மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அண்ணாமலை, உள்ளாட்சி துறை மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்கள் மீதான புகார்களை மறைக்கவே, முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியின் பேச்சை திரித்து கூறுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தத்தை திமுக எதிர்ப்பது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்