இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த சுழற்சியின் காரணமாக, அடுத்த சில நாட்களில், அதாவது ஆகஸ்ட் 13ஆம் தேதி வாக்கில், வடமேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், புதுவையிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.