வங்கக் கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, இன்று முதல் ஆகஸ்ட் 17 வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் ஆகஸ்ட் 13-ம் தேதியும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் 14-ம் தேதியும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.