தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Mahendran

வியாழன், 5 ஜூன் 2025 (18:10 IST)
மேற்கு திசையில் காற்றின் வேக மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை  மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சில பகுதிகளில் இடி, மின்னலுடன் சேர்ந்து லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், ஜூன் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையிலும், அதேபோன்று சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை ஏற்படும் நிலை காணப்படும். ஜூன் 10ஆம் தேதியும் 11ஆம் தேதியும் தமிழகத்தின் ஒரு பகுதியிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான அளவில் மழை பொழிவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இன்னும் ஒரு வாரம் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்யும்.
 
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இன்று மற்றும் நாளை வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
 
வானிலை மாறுபாடுகள் குறித்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்