தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. மே 18-ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சில இடங்களில் மிகுந்த மழை ஏற்படலாம்.
நேற்று அதிகபட்சமாக திருவண்ணாமலையில் உள்ள செங்கத்தில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், கடலூர் உள்ளிட்ட பல இடங்களிலும் 60 முதல் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.