ஜூன் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (14:58 IST)
தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 27ஆம் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழக முழுவதும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாடு பொதுச் செயலில் ஜூன் 27ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று நகரின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் அறிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழக முழுவதும் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்