அதள பாதாளம் செல்லும் தங்கம் விலை.. இன்னும் இறங்கும் என தகவல்..!

வெள்ளி, 23 ஜூன் 2023 (10:11 IST)
தங்கம் விலை கடந்த சில மாதங்களாக கடும் ஏற்றத்தில் இருந்தது என்பதும் கடந்த பத்து நாட்களுக்கு முன்ன தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5550 என இருந்தது என்பதும் தெரிந்ததே. ஆனால் தற்போது படிப்படியாக குறைந்து இன்று சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ5445 என இறங்கி உள்ளது
 
நேற்றைய விலையில் இருந்து ஒரு சவரனுக்கு 320 ரூபாய் இறங்கி உள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இன்னும் தங்கம் அதிக அளவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ:
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ரூபாய் 5445.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 குறைந்து  ரூபாய் 43560.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5910.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47280.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் குறைந்து  ரூபாய் 74.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74000.00எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்