சட்டென மாறிய வானிலை.. சென்னையின் பல பகுதிகளில் மழை..!

Mahendran

வியாழன், 4 ஜனவரி 2024 (16:55 IST)
சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் காலை தெரிவித்த நிலையில் சற்றுமுன் திடீரென வானிலை மாறி சென்னையில் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, அரும்பாக்கம்,  தேனாம்பேட்டை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.  

ALSO READ: தமிழ்நாட்டில் பாஜக தலைமையில்தான் கூட்டணி.. முன்னாள் முதல்வர் உறுதி..!

மிதமான மழை காரணமாக குளிர்ச்சியான வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  ஆனால் அதே நேரத்தில் பெரிய மழை இல்லை என்பதால் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் தமிழகத்தில் சென்னை உள்பட  சில மாவட்டங்களில் இன்னும் ஒரு வாரத்துக்கு மழை உண்டு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்