கலைஞர் 100 விழா- முதல்வருக்கு அழைப்பிதழ்

Sinoj

வியாழன், 4 ஜனவரி 2024 (14:16 IST)
தமிழ் சினிமாவில் பராசக்தி உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு புரட்சிகரமான வசனங்களையும், பாடல்கள், திரைக்கதை எனப்  பன்முகக் கலைஞராக பணியாற்றியவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி.
 
அவரது நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா  கடந்தாண்டு டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.
 
தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழாவிற்கு நேரில் வந்து சிறப்பிக்குமாறு முக்கிய பிரபலங்கள் பலருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்த  நிலையில்,  சமீபத்தில், சென்னையில் ஏற்பட்ட அதிகனமழை மற்றும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் இந்த விழா  தேதி மாற்றப்பட்டது.
 
அதன்படி, கலைஞர் 100 விழா வரும் 6 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில்  நடக்கிறது.
 
எனவே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் “கலைஞர் 100" திரைத்துறையின் மாபெரும் கலைவிழாவிற்கான அழைப்பிதழை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினை  இன்று  நேரில் சந்தித்து வழங்கினார். அப்போது பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் லிங்குசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
நேற்று, இவ்விழாவிற்கு வந்து சிறப்பிக்கும்படி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனை      நேரில் சந்தித்த தமிழ்த் திரைப்பட சங்கங்களின் உறுப்பினர்கள் அவர்களுக்கு புதிய அழைப்பிதழை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்