திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மெதூர் ஊராட்சி விட தண்டலம் அரசூர் வழியாக செல்லும் சாலையானது கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் முறையாக சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டும் அவ்வழியாக செல்லும் பேருந்தும் முறையாக இயக்கப்படாததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.