சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மிதமான மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வானிலை ஆய்வு மையம், தமிழகம் மற்றும் கேரளாவிற்கு அக்டோபர்7(இன்று) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டதாக சென்னை வானிலை மைய இயக்குனர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்து சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, திருநின்றவூர், தாம்பரம், பல்லாவரம், அம்பத்தூர் மற்றும் சென்னையில்எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர் பகுதிகளில் தற்பொழுது மிதமான மழை பெய்து வருகிறது. குளிர்மையான க்ளைமேட்டால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.