திடீர் திருப்பம் : ரெட் அலார்ட் எச்சரிக்கை வாபஸ்

சனி, 6 அக்டோபர் 2018 (13:05 IST)
வருகிற 8ம் தேதி விடுக்கப்பட்டிருந்த ரெட் அலார்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

 
தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையளவு வரும் 7-ந்தேதி அன்று அதிகபட்சமாக 25 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசியப் பேரிடர் குழுக்களும் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டது. 
 
இந்நிலையில், திடீர் திருப்பமாக ரெட் அலார்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்பதால் ரெட் அலார்ட் வாபஸ் பெறப்பட்டதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தற்போது செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார்.
 
ஆனால், அதேசமயம், வருகிற 8ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்