3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Mahendran

சனி, 8 ஜூன் 2024 (09:14 IST)
தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதை அடுத்து கேரளா உள்பட தென் மாநிலங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று கன்னியாகுமரி, தென்காசி ,திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மேற்கண்ட 3 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை முதல் லேசான மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதை அடுத்து குளிர்ச்சியான கற்பவைப்பநிலை காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்