தமிழகத்தில் மீண்டும் கொரோனா லாக்டவுனா? – சுகாதாதத்துறை செயலாளர் விளக்கம்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (10:46 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் லாக்டவுன் அறிவிக்கப்படுமா என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மாவட்டம் தோறும் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் மீண்டும் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்பில்லை, மக்கள் புரளிகளை நம்ப வேண்டாம். அதே சமயம் அலட்சியமாகவும் இருக்க வேண்டாம். குடும்ப விழாக்கள், அரசியல் கூட்டங்கள் மூலமாக கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்வது அவசியம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்