ஐபேக் உளவாளிகள் என்னை ஃபாலோ பண்றாங்க! – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (09:07 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஐபேக் ஆட்கள் தன்னை பின் தொடர்வதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் மதுரை திருமங்கலத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “எதையும் வெளிப்படையாக பேச முடியாத நிலை உருவாகியுள்ளது. வீட்டிலோ, வெளியிலோ எதையும் பேசமுடிவதில்லை. ஐபேக் என ஒன்று இருக்கிறது. அவர்கள் எனக்கு பின்னாலேயே கேமராவோடு சுற்றி வருகிறார்கள். 5 நிமிடத்தில் வீடியோ எடுத்து போட்டு விடுவார்கள்” என கூறியுள்ளார்.

சமீபத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற ஆர்.பி.உதயகுமார் அங்கு அவரை காண வந்த தொண்டர் ஒருவரை பிடித்து தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதை குறிப்பிட்டுதான் அமைச்சர் அவ்வாறு பேசியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்