மனிதனிடம் நேசம் துளிர்க்கச் செய்யும் புன்னகை !

புதன், 30 டிசம்பர் 2020 (21:44 IST)
நல்லவைகளும் தீயவைகளும் கலந்துள்ள இவ்வுகிலிருந்து நாம் நம்மை வளர்த்துக்கொள்ள அன்றாடமும் அறிந்துகொள்ளவேண்டியவைகளும் தெரிந்துகொள்ளவேண்டிவைகளும் அதிகமுள்ளதென்பதை நாம் பள்ளிக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களைக்த்தாண்டி இந்தச் சமூகத்திலும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய படிப்பினைகள் எத்தனையோவுண்டு. இவை அத்தனையும் அறிந்துகொள்ள நமக்கு வாழ்நாட்கள் போதாது என்றாலும் நம்மாள் முடிந்தளவு நம் அறிவையும் அனுபவத்தையும் பெருக்கிக்கொள்ள பலவித விசயங்கள் நமக்குதவுகின்றன.

அவற்றில் புத்தமும், பெரியோ மொழிகளும், பெற்றோர் உற்றோரின் கணிசமான அக்கறைகலந்த நல்லுபதேசங்களும் நம்மை தீங்கிலிருந்து தற்காத்துக்கொள்ளக்கூடிய தொன்றாக இருந்து பாதுக்காக்கிறது. ஆனால் காலம் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்தத் திசையில் வேண்டுமானாலும் புரட்டிப்போகக்கூடிய வாய்ப்புள்ளதென்பதை யாவரும் அறிவர். இன்றுள்ளது நாளையில்லாமல் போகலாம். நாளையுள்ளது அடுத்தநாள் பழையதாகமாறி இல்லாமல் போகலாம். ஆனால் மனிதன் தன் சகமனிதன்மேல் கொள்ளும் அன்பு வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் புத்துணர்வு கொண்டதாகும். உலகில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அன்புததும்புகின்ற புன்னகைமொழி என்பது ஒன்றுதான். யார் சொன்னாலும் எது சொன்னாலும் புன்னைக்கு மட்டும் கலங்கத்தைக் கற்பிக்கமுடியாது.

ஒரு குழந்தையின் முகத்தின் காணும் அதே புன்னகைதான் முதியவரின் முகத்திலும் காணமுடிகிறது. ஆனால் குழந்தைக்கு இருக்கும் லேசான மனம் அதே முதியவருக்கு இருக்குமா என்றால் அது அவர் குழந்தைப்பருவம் முதற்கொண்டு கற்றுக்கொண்ட பெற்றுக்கொண்ட அனுபவ விஸ்தீரனங்கள் எல்லாமும் அவரது உள்ளத்தில்பொதிந்துபோய், அவரது மனத்தைக் கனமாக்கியிருக்கும்போது தன்மனதை இலகுவாக்க வேண்டிய தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டி அவர்களுக்குத் தேவையான ஒரு புறமருந்தாக புன்னகையாகவும் அகமருந்தாக அன்பின் முனுவல்களும் இருந்தாலே போதுமென்று கருதுவார்கள். இன்று எல்லாத்திசைகளிலுமுள்ள மனிதர்களிடம் காணக்கிடைக்கிற ஒன்று வெறுப்பு.

அங்காடி முதல் அரசியல்வரை பல்வேறுபட்ட மனிதர்களிடமட்டுமல்ல நாடறிந்த தலைவர்களிடமே கூட இந்த வெறுப்புப்பூதம் முளைத்து ஒற்றுமையைக் குலைக்கும் வேலையை இரவுபகலாகச் செய்துவருகிறது. நாம் நேசிப்பவர்கள் மட்டுமல்ல நம்மை வெறுப்போர் மீதும் நாம் மறுகன்னத்தைக் காட்டச்சொன்ன இயேசுபிரானைபோல் கருணைக்காட்டினால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் அன்னை தெரசா உயிர்ப்பெற்று மனித நேயத்தை மீண்டும் துளிர்க்கச் செய்வார்.

தூய அன்பின் பணுவலாய் இப்பூமியை மாற்றும் அற்புத மருந்தாக இந்தப் புன்னகைப்பூவே திகழும்  என்பதை நாம் அறிந்து கொள்வோம்.

சினோஜ்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்