வீட்டை வாடகை எடுத்து கஞ்சா விற்பனை! – கல்லூரி மாணவர்கள் கைது!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (11:39 IST)
புதுச்சேரியில் வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்து வந்த மாணவர்கள் உட்பட பலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை மூலமாக கஞ்சா கடத்தல்க்காரர்களை போலீஸார் பிடித்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல புதுச்சேரியிலும் “ஆபரேஷன் விடியல்” என்ற பெயரில் கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் சோதனை நடத்திய போலீஸார் கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

அங்கிருந்த 6 பேரையும் போலீஸார் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் கல்லூரி மாணவர்கள் என்றும், அவர்கள் கஞ்சா பொட்டலங்களை பள்ளி மாணவர்களுக்கு விற்றது தெரிய வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்