கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கிக்கணக்குகள் முடக்கம்: 2,423 பேர் கைது!
வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:14 IST)
கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், 2423 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக காவல்துறை ஆப்பரேஷன் வேட்டை 2.0 என்ற வேட்டையை நடத்தியது. இந்த வேட்டையில் போதை பொருளான கஞ்சா மொத்ஹ்ட வியாபாரிகள் மற்றும் சில வியாபாரிகள் பிடிபட்டனர்
ஒரே மாதத்தில் இந்த வேட்டையில் 2,423 வியாபாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் இருந்து சுமார் 3600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மேலும் கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன என்றும், 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்