தேர்தலை புறக்கணிக்க முடிவா? முதலமைச்சர் அதிரடி கருத்து!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (17:34 IST)
அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தந்தாl தேர்தலை புறக்கணிக்க முடிவு எடுக்கப்படும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
தமிழகத்தை போலவே புதுவையிலும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என்பதும் இந்த தேர்தலை சந்திக்க அம்மாநிலத்தில் உள்ள திமுக காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தேர்தலை புறக்கணிப்பது குறித்து முடிவு எடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து வந்தால் தேர்தலை புறக்கணிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என புதுவை மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்
 
புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி கடந்த பல ஆண்டுகளாக புதுவை மாநில மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்றும் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்