தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னர் தலைவி ரிலீஸ் தேதி!

திங்கள், 8 பிப்ரவரி 2021 (19:01 IST)
கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் தலைவி படம் தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்படும் முன்னர் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தடைபட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் படத்தின் ரிலிஸ் தேதி தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வெளியாகிவிடும் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஏதாவது பிரச்சனைகள் எழலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்