வீட்டுக்குள் செல்ல நாய்க்கு சமாதி…. ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (17:31 IST)
மக்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான விலங்குகள் பூனைகள்,மற்றும் நாய்கள். மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பாவித்து அவற்றின் மீது அன்பையும் பாசத்தையும் பொழிவது கண்கூடு.

சமீபத்தில் மத்திய அரசு செல்லப்பிராணிகள் மீது தாக்குதல் நடத்தினால் சிறைத்தண்டனையை அதிகப்படுத்தி சட்டமியற்றியது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.

மதுரை மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜா. இவரது மனைவி விஜயா தம்பதி.  இவர்கள் தங்கள் வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த மணி என்ற நாய் சமீபத்தில் இறந்து போனது.

சுமார் 5 ஆண்டுகாலம் இவர்களின் வீட்டில் வசித்து வந்த நாயின் பிரிவைத் தாங்க முடியாமல் தங்களின் வீட்டிலேயே அந்த நாய்க்கு சமாதி கட்டி தினமும் அதற்கு பூஜைகள் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்