புதுவை உள்துறை அமைச்சருக்கு டெங்கு காய்ச்சல்.. மருத்துவமனையில் அனுமதி..!

Mahendran
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (10:31 IST)
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், புதுவை மாநில உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, அவர் சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்போது, அமைச்சர் நமச்சிவாயம் குணமடைந்து வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று, அமைச்சர் நமச்சிவாயம் உடல்நிலை குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உள்ளிட்டோர், அமைச்சரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்