பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தனது அலுவலகத்தில் மூன்று முறை மயங்கி விழுந்ததாகவும், இதனை அடுத்து, அவர் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இது ஒரு வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்று முதல்வரின் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பஞ்சாப் முதல்வர் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான செய்திக்கு, முதல்வரின் உதவியாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். முதல்வரின் உடல் நலம் தற்போது சீராக இருப்பதாகவும், அவரது உடல் நலம் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.