காரில் தேசிய கொடியை தலைகீழாக வைத்த முதல்வரைன் டிரைவர் சஸ்பெண்ட்

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (05:27 IST)
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் காரின் டிரைவர் தேசிய கொடியை காரின் மீது வைக்கும்போது தலைகீழாக வைத்ததால் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.



 


நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த புதுவை முதல்வர் நாராயணசாமியை காரில் புதுவை அழைத்து செல்ல அவருடைய டிரைவர் காத்திருந்தார். முதல்வர் வந்ததும் அவரை ஏற்றிக்கொண்டு புதுவை கிளம்பியபோது அவருடைய காரில் தேசிய கொடி தலைகீழாக இருந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தகவல் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்த முதல்வரின் தனிச்செயலாளர் ராஜமாணிக்கம் முதல்வரின் டிரைவரை சஸ்பெண்ட் செய்தார்.
அடுத்த கட்டுரையில்