போதையில் சுற்றும் இளைஞர்களால் பொதுமக்கள் பாதிப்பு

வியாழன், 30 ஜூன் 2022 (22:39 IST)
கரூரில் மீண்டும் களோபரமாக்கும் கஞ்சா ! கஞ்சா போதையில் 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் மற்றும் பொதுமக்களை துன்புறுத்தி வருவதால் பொதுமக்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு
 
கரூர் என்றாலே கஞ்சா, 24 மணி நேரமும் தொடர் மதுவிற்பனை, லாட்டரி ஆகியவைகள் இருந்து வருவதாக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடியாக பேட்டி கொடுத்ததன் காரணமாக, 
 
கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சுந்தரவடிவேல் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக, புதிய எஸ்.பி யாக சுந்தரவதனம் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்ற நாள் முதலே, இன்று வரை அதே குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணமே இருந்து வருகின்றன. இந்நிலையில் கஞ்சா போதையில் இளைஞர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வரும் சமயத்தில் பெண்களையும், பொதுமக்களையும் மிகவும் கேவலமாக நடத்தி வரும் நிலையில், புதன் கிழமை இரவு அன்று சுமார் 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது மற்றும் கஞ்சா போதையில் பெண்களையும், பொதுமக்களையும் தாக்க முயற்சித்துள்ளனர். உடனே அக்கம் பக்கத்தினர் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியதால் அங்கிருந்து கஞ்சா போதை இளைஞர்கள் உடனடியாக தப்பித்து ஓடியுள்ளனர். இந்த காட்சிகள், கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள செல்வநகரில் தான் அரங்கேறியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 2 ம் தேதி தான் கரூருக்கு வர உள்ள நிலையில், உச்ச கட்டத்தினை நோக்கி கஞ்சா விற்பனை, 24 மணி நேரம் மதுவிற்பனை நடந்து வருவதால் பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்