2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: நாளை முதல்வர் ஆலோசனை!

வியாழன், 30 ஜூன் 2022 (20:45 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று தமிழக கொரோனா பாதிப்பு 2000ஐ தாண்டி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு என்று ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்
 
அமைச்சர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உடன் அவர் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பில்லை என்றாலும் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், மாஸ்க் அணிதலை கட்டாயப்படுத்துதல்  உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்து நாளை  வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்