பிடிஆர் ஆடியோ விவகாரம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவரது இலாக்கா மாற்றப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தனக்கு தொழில் தகவல் தொழில்நுட்பத்துறை கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு தான் என்றும் நன்றியுடன் ஆக இருப்பேன் என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நம்பர் 1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலாக்காவை மாண்புமிகு முதலமைச்சர் எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன். 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிருவகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற IT & ITES தொழில்துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன்