பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் கவர்னர் நடவடிக்கை எடுப்பார்.. விபி துரைசாமி பேட்டி

திங்கள், 24 ஏப்ரல் 2023 (07:58 IST)
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் உறுதி அளித்துள்ளார் என பாஜக மாநில துணைத்தலைவர் வி பி துரைசாமி பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் கசிந்தது. இந்த ஆடியோவில் முதலமைச்சரின் குடும்பத்தினர் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்திருப்பதாக கூறப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை செய்ய ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றும் பாஜக மாநில துணை தலைவர் விபி துரைசாமி தெரிவித்துள்ளார் 
 
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய குரல் இல்லை என்பதை நீதிமன்றம் சென்று நிரூபிக்க வேண்டும் என்றும் ஆடியோவில் இருப்பது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குரல் தான் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்