மீண்டும் தலை தூக்குகிறதா கிரானைட் கொள்ளை? முகிலன் கேள்வி

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (00:08 IST)
முகிலன் அதிரடி கேள்வி கருத்துகேட்பு கூட்டத்தினை நிறுத்தி பொதுமக்கள் கலந்து கொள்ளும் படி கருத்துக்கேட்பு நடத்த வேண்டுமென்றும் முகிலன் கோரிக்கை தமிழகத்தில் சகாயம் ஆய்வுக் குழு அறிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி கிரானைட் முறைகேடு அறிக்கையை வெளியிட வேண்டும் என முகிலன் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் கிரானைட் குவாரி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் பழைய ஜெயங்கொண்டம் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாக்கத் அலி கான் தலைமையில் நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர் முகிலன் பேசுகையில், கிரானைட் குவாரிக்கான சுருக்க அறிக்கை சேலத்தைச் சேர்ந்த ஜியோ எக்ஸ்பெளார் அண்ட் மைன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பான புள்ளி விவரங்களை சேகரித்து வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் அவர்களது உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், தமிழகத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளார். அதன்படி கிரானைட் குவாரிகள் நடத்தப்படாமல் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகிறது.

தற்போது கரூர் மாவட்டத்தில் பல கிரானைட் குவாரிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிஆர்பி உறவினருக்கு இந்த குவாரிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பிஆர்பியின் கொள்ளை தமிழகத்தில் மீண்டும் ஏற்படுத்தப்படுகிறதா? என கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனாவை காரணம் காட்டி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தாமல், கிராமசபை கூட்டங்கள் நடத்தாமல் இருந்து வரும் இந்த நிலையில், அவசர, அவசரமாக ஒரே நாளில் இரண்டு, மூன்று இடங்களில் கிரானைட் குவாரி மற்றும் கல் குவாரிக்கான கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவது ஏன்? யாருக்காக நடத்தப்படுகிறது என கேள்வி எழுப்பினார். கனிம வளங்கள் இயற்கையையும், மக்களையும் பாதிக்காத வகையில் எடுக்கும் வகையில் தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் கருத்துக்கு எதிராக அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும், கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடிக்கு ஆதரவாக கொள்ளையடித்த அதிகாரிகள் தான் இங்கு இருப்பதாகவும் இதை நேரடியாக குற்றம் சாட்டுவதாக கூறினார்.

தமிழகத்தில் சகாயம் ஆய்வுக் குழு அறிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி கிரானைட் முறைகேடு அறிக்கையை வெளியிட வேண்டும். இதற்கு காரணமானவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என முகிலன் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்