தேசிய விளையாட்டு தினம்...

சனி, 28 ஆகஸ்ட் 2021 (21:53 IST)
national sports day

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் தயான் சந்த்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ராணுவ வீரரும், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் மறைந்த தயாந்த் சந்த் 1926 ஆம் ஆண்டு முதல் முறையாக  ஒலிம்பிக்கில் பங்கேற்னார். ஹாலந்துக்கு எதிரான ஆட்டத்தில் காய்ச்சலைப் பொருட்படுத்தாது வெற்றி பெற்று தங்கம் பெற்றுக் கொடுத்தார்.
அதேபோல் 1932 லும் இவரது திறமையால் மீண்டும் தங்கம் கிடைத்தது. பின்னர் 1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற தொடரிலும்  கேப்டன் பொறுப்பேற்ற இவர்  தனது பல் உடைந்தாலும் 6 கோல் அடித்து அசத்தினார். இவரது அசாத்திய திறமையக் கண்டு இவரை ஜாக்கி மந்தி ரவாதி என அழைத்தனர். இவரது ஹாக்கி ஸ்டிக்கை வாங்கிப் பார்த்து அதில் காந்தம் உள்ளதா எனவும் சோதித்துப் பார்த்தனர்.

இவரது பிறந்த தினமான ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினமாகக், கொண்டாடப்பட்டுவருகிறது. நாளை தயாந்த் சந்த் பிறந்தநாள் என்பதால்  இணையதளத்தில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.   மேலும் இந்த நாளில் விளையாட்டுத்துறையில் உள்ள வீரர்கள், வீராங்கனைகளுக்கும், பாராலிம்பிக்கில் கலந்துகொண்டுள்ள வீரர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டும் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்