நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய எச்.ராஜா: கைது செய்ய போராட்டம்!

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (19:15 IST)
பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜா சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். தனது அதிரடியான கருத்துக்களால் அதிகமாக ஊடக வெளிச்சத்தில் உள்ள எச்.ராஜா தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.
 
கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து அவதூறாக தனது கட்டுரையில் கூறியதாக பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. இந்த சர்ச்சைக்கும், தற்போது வைரமுத்துவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கும், அவருக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல்களுக்கும் வித்திட்டவர் எச்.ராஜா தான்.
 
ஆண்டாள் குறித்து எச்.ராஜா தனது கட்டுரையில் மேற்கோள் காட்டியதை தாங்க முடியாமல் கோபத்தின் உச்சியில் எச்.ராஜா வைரமுத்துவை ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் தற்போது நபிகள் நாயகத்தை எச்.ராஜா அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து எச்.ராஜாவை கண்டித்து வேலூரில் இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என இஸ்லாமிய பெண்கள் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்