8 வழி சாலை எதிர்ப்பு போராட்டம்: 3 செய்தியாளர்கள் கைதால் பரபரப்பு

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (10:01 IST)
சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் செய்பவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மன்சூர் அலிகான், பியூஷ் மானுஷ், மாணவி வளர்மதி, ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்று செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த போராட்டம் குறித்த செய்தியை சேகரிக்க சென்ற மாத்ருபூமியின் அனூப் தாஸ், கேமராமேன் முருகன், தீக்கதிர் ராமதாஸ் ஆகிய 3 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டதாக 
செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் என தெரியாமல் அனூப் தாஸ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்