எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள் - ஹெச்.ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம்

வியாழன், 18 ஜனவரி 2018 (15:18 IST)
கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக களம் இறங்கியுள்ள இந்து அமைப்பினருக்கு இயக்குனர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
ஆண்டாள் குறித்து தனது கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தொடர் கண்டனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்பும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை
 
குறிப்பாக வைரமுத்துவுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார். வைரமுத்துவை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார் எச்.ராஜா. இந்நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக பிரபல இயக்குனர் பாரதிராஜா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், எச்.ராஜாவை சரமாரியாக விமர்சித்து இருந்தார். பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ எனவும், எச்.ராஜாவால் இந்தியா துண்டாடப் படுமோ என்றும் அச்சம் தெரிவித்தார்.

 
இந்நிலையில், இன்று ஒரு படவிழாவில் கலந்து கொண்டு பேசிய பாரதிராஜா “வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்தில் கொல்லைப்புறமாக வர நினைத்தால் நிறைவேறாது. எங்களை குற்றம்பரம்பரை ஆக்கி விடாதீர்கள். எங்களுக்கு மதம் என்பது ஒருபோதும் கிடையாது” என பகீரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்